சென்னை அண்ணா சாலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
2021 தேர்தலின்போது 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்குப் பணி நிரந்தரம் வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.
ஆனால், திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகளைக் கடந்தும் வாக்குறுதியை நிறைவேறாததால் பகுதிநேர ஆசிரியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
அதன் ஒருபகுதியாக, சென்னை அண்ணாசாலை மற்றும் சிவானந்த சாலை சந்திப்பில் பகுதிநேர ஆசிரியர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.