சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கண்டதேவி பகுதியில் உள்ள பெரியநாயகி அம்பிகா சமேத சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல் இருந்து வந்தது.
இதன் காரணமாகக் கடந்த 17 ஆண்டுகளாக இக்கோயிலில் தேரோட்ட விழா நடத்தப்படாமல் இருந்தது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் பலத்த பாதுகாப்புடன் சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.