காவல்துறை விசாரணையின்போது கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அவரது நண்பரும் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக அடுத்தடுத்த கட்ட விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சம்பவம் நிகழ்ந்த அன்று, அஜித்குமாரின் நண்பரும் ஆட்டோ ஓட்டுநருமான அருண் என்பவரையும் போலீசார் அடித்துத் துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
போலீசார் தாக்கியதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள அருண் மதுரை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காலில் ஏற்பட்டிருந்த வீக்கம், ரத்தக்கட்டு மற்றும் விரல் வலிக்கு உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அருண் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.