தஞ்சாவூர் அருகே சரக்கு வாகனத்தின் மீது சுற்றுலா வாகனம் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
சென்னையைச் சேர்ந்த குமார் உள்ளிட்ட 7 பேர் தஞ்சைக்கு காரில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் உதாரமங்கலம் அருகே சரக்கு ஆட்டோ ஒன்று திடீரென எதிர் திசையில் வந்ததால், அவ்வழியாக வந்த குமாரின் கார் கட்டுப்பாட்டை இழந்து சரக்கு ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், குமார், விஜயா, துர்கா மற்றும் நிவேனி சூர்யா ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த மோனிஷா, ஸ்டாலின், விக்னேஷ் ஆகியோர் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.