மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அடுக்குமாடிக் குடியிருப்பின் ஜன்னலில் அந்தரத்தில் தொங்கிய 4 வயது சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார்.
புனேவின் கத்ராஜில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து 4 வயது சிறுமி தவறி விழுந்தார்.
ஜன்னல் கம்பியைப் பிடித்தவாறு சிக்கித் தவித்த சிறுமி அலறி துடித்தார். தொடர்ந்து சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் தீயணைப்பு வீரர் துரிதமாகச் செயல்பட்டு சிறுமியைப் பத்திரமாக மீட்டார்.
தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.