கேரளாவில் இன்றும், நாளையும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொது போக்குவரத்து பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களின் கூட்டுக்குழு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
அதில், உடன்பாடு ஏற்படாததால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று மாநிலம் தழுவிய அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை 10 மத்திய தொழிற்சங்கங்கள் 24 மணி நேர வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.