போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப்பொருள் வழக்கில், கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள், நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
இருவரும் தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமினும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் செலுத்த வேண்டும் எனவும்,
மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் தினமும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி, கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.