காவலர்கள் தாக்கியதில் மரணமடைந்த அஜித்குமாரின் சகோதரர் நவீன் தமக்கு வழங்கப்பட்ட அரசு வேலை மற்றும் வீட்டு மனை பட்டா குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்கள் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் நவீனுக்கு அரசு வேலையும், 3 சென்ட் நிலமும் இழப்பீடாக வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது.
இந்த நிலையில், தமக்கு ஆவினில் வழங்கப்பட்ட வேலை அரசு வேலை இல்லை என்றும், வேலைக்கு செல்ல 80 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டியுள்ளதாகவும் நவீன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அரசு வழங்கியுள்ள இடம் குடியிருக்கத் தகுதியில்லாத இடமாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள நவீன், இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டும் எந்த பதிலும் இல்லை என வேதனை தெரிவித்துள்ளார்.