அவிநாசி இளம்பெண் ரிதன்யா தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது விரைவான நடவடிக்கை தேவை என நடிகை அம்பிகா வலியுறுத்தியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட ரிதன்யாவின் பெற்றோரை நடிகை அம்பிகா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், விலங்குகளின் உயிர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட,மனிதர்களின் உயிர்களுக்கு இருப்பதில்லை என குற்றம் சாட்டினார்.
மற்ற நாடுகளில் இருப்பதுபோன்று தண்டனைகள் கடுமையாக்கினால் தான், தற்கொலை போன்ற மரணங்கள் குறையும் எனவும் தெரிவித்தார்.