அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாசுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் பாமக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூர் பகுதியில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், 2026 சட்டப்பேரவைத் தேர்தல், 2029 மக்களவை தேர்தலில் அதிக இடங்களை கொடுக்கும் நல்ல கூட்டணியை தேர்வு செய்யும் அதிகாரத்தை ராமதாஸுக்கு அளிப்பது உட்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தலைமை உத்தரவுக்கு கட்டுப்படாமல் கட்சியை பலவீனப்படுத்தும் நபர்கள் மீது கட்சி விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கும், அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாசுக்கு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது…