ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் சுவாமி கோயில் 108 வைணவ திருத்தலங்களுள் ஒன்றாக போற்றப்படுகிறது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் வரும் கேட்டை நட்சத்திரத்தில், நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேக விழா நடைபெறுவது வாடிக்கை. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேக விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
காவிரி ஆற்றில் இருந்து ஒரு தங்கக்குடம் மற்றும் 28 வெள்ளிக்குடங்களில் சேகரிக்கப்பட்ட புனித நீரால், உற்சவரான நம்பெருமாளுக்கும், உபயநாச்சியாருக்கும் திருமஞ்சனம் நடைபெற்றது.
தொடர்ந்து மூலவர் ரங்கநாத சுவாமிக்கு தைலக்காப்பு பூஜைகள் நடைபெற்றதுடன், உற்சவர் நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியார் அம்மனுக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.