மானாமதுரை அருகேயுள்ள முத்தையா அய்யானார் கோயிலில் 11 ஆண்டுகளுக்கு பின் புரவி எடுப்பு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள மேலப்பிடாவூர் கிராமத்தில் முத்தையா அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்நிலையில், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி புரவி எடுப்பு திருவிழா 11 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றது.
இதற்காக சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கடந்த 1-ம் தேதி முதல் காப்பு கட்டி விரதம் இருந்த நிலையில், அவர்கள் புரவிகளை தலையில் சுமந்து பாதயாத்திரையாக கோயிலுக்கு சென்றனர்.
தொடர்ந்து கோயிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். புரவி எழுப்பு திருவிழாவை முன்னிட்டு நாளை மஞ்சு விரட்டு போட்டியும், நாளை மறுதினம் கிடா முட்டும் போட்டியும் நடத்தப்படவுள்ளதாக மேலப்பிடாவூர் கிராம மக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.