சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பள்ளி மாணவரின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிங்கம்புணரியில் சிபிஎஸ்சி பள்ளியில் பயின்றுவந்த மாணவர் அஸ்விந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதை கண்டித்து பாஜக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் பாண்டித்துரை கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாணவரின் தந்தை பாலமுருகன், உடற்கூராய்வின்போது மாணவரின் உடலில் காயம் இருந்ததாகவும், மகன் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.