கடலூர் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டிற்கு புதிய கேட் கீப்பரை தெற்கு ரயில்வே நியமித்துள்ளது.
கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் பகுதியில் மூடப்படாத ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக ரயில்வே கேட் ஊழியர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், செம்மங்குப்பம் ரயில்வே கேட்டிற்கு ஆனந்தராஜ் என்பவரை புதிய கேட் கீப்பராக நியமனம் செய்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.