உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி கங்கை நதியில் நீர்மட்டம் உயர்வதால் மீட்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர் மழை காரணமாகக் கங்கை நதியில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆற்றில் படகின் மூலம் மீட்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் ஆற்றில் இறங்க வேண்டாமென ஒலி பெருக்கி மூலம் கரையோர மக்களுக்கு அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.