சிவகங்கை மாவட்டம், மேலநெட்டூர் கிராமத்தில் உள்ள சொர்ணவாரீஸ்வரர் – சாந்தநாயகி அம்மன் கோயில் தேரோட்டத் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
இந்த கோயிலில் ஆனித் திருவிழா கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் சுவாமியும், அம்பாளும் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.
இந்நிலையில், முக்கிய நிகழ்வாக நடைபெற்ற தேரோட்டத் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.