ஜம்மு காஷ்மீரின் ரஜோரியில் நெடுஞ்சாலை பணிகளால் வீடுகள் சேதமடைந்ததால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரஜோரியில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியினால் மண்சரிவு ஏற்பட்டு சாலையோரத்தில் உள்ள குடியிருப்புகள் சேதமடைந்தன.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.