ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே 8 ஆண்டுகளாகப் பூட்டப்பட்டு இருக்கும் சந்தன மாரியம்மன் கோயிலைத் திறக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
தொண்டிபுதுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள கோயிலில் சிறுவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு இரு தரப்பு மோதலாக மாறியது. இதன் காரணமாகப் பூட்டப்பட்ட கோயில் 8 ஆண்டுகளைக் கடந்தும் திறக்கப்படாமல் உள்ளது.
இது தொடர்பாக மனு அளிக்கப்பட்ட நிலையில் கோயிலைத் திறப்பதாக வட்டாட்சியர் உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.