பீகார் தொழிலதிபர் கோபால் கெம்கா கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.
இரு தினங்களுக்கு முன்பு பீகார் தொழிலதிபரும், பாஜக பிரமுகருமான கோபால் கெம்கா, பாட்னாவில் உள்ள அவரது வீட்டுக்கு வெளியே மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான விகாசை தனிப்படை பிடிக்க போலீசார் சென்றனர். அப்போது, போலீசாரை நோக்கி விகாஷ் துப்பாக்கியால் சுட்டதாகவும், பதில் தாக்குதலில் விகாஷ் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அம்மாநில காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.