டெக்சாஸை புரட்டிப் போட்ட கனமழையால் பலி எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக அமெரிக்காவின் பல மாகாணங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதேபோல் டெக்சாஸின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
இந்த மழையால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தில் மாயமானவர்களைத் தேடும் பணியும் தீவிரமடைந்துள்ளது.