தொழிலாளர் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி தேனி ரயில் நிலையத்தில் தொழிற்சங்கத்தினர் தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், தொழிலாளர் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட 17-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13 மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, தொமுச உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.
இந்நிலையில், தேனி ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட 200-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர், தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இந்த போராட்டம் காரணமாக மதுரையிலிருந்து தேனி நோக்கி வந்த ரயில் ஆண்டிபட்டி ரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.