தொமுச தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த வேலைநிறுத்த போராட்டம் தோல்வியடைந்து உள்ளதாக அண்ணா தொழிற்சங்க பேரவை மாநிலச் செயலாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்காமல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பணிக்கு வந்த போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்ததுடன், மலர்க்கொத்து கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் பாராட்டு தெரிவித்தார்.