தென்காசி அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டில் உள்ள கழிவறையில் தண்ணீர் வராததால் தாய்மார்கள் அவதிக்குள்ளாகி வருவதாக உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் நிலையில், பிரசவ வார்டில் உள்ள கழிவறையில் கடந்த மூன்று நாட்களாகத் தண்ணீர் வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தாய்மார்களின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள், பிரசவ வார்டு முன்பு திரண்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
கழிவறையில் தண்ணீர் வசதி இல்லாததால் தாய்மார்கள் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், டயப்பரை பயன்படுத்துமாறு மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாகப் பதிலளிப்பதாகவும் உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.