இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருந்து ஒரு கிராமத்தையே நாய் ஒன்று காப்பாற்றி உள்ளது.
கடந்த ஒன்றாம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் மண்டியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது நரேந்தர் என்பவர் வளர்த்து வந்த நாய் தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருந்தது.
இதனால் அதன் உரிமையாளர் வெளியே வந்து பார்த்தபோது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது தொியவந்தது.
உடனடியாக அங்கிருந்த 19 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேரும் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர்.
அந்த 19 வீடுகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தங்களது உயிரைக் காப்பாற்றிய நாய்க்கு தாங்கள் கடன்பட்டிருப்பதாக அப்பகுதியினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.