பிரேசில் பயணத்தை முடித்துக் கொண்டு நமீபியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, 21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
5 நாட்கள் பயணமாகக் கானா, பிரேசில், அர்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, பிரேசில் பயணத்தை முடித்துக் கொண்டு நமீபியா சென்றடைந்தார்.
தலைநகர் விண்ட்ஹோக்கில் பிரதமர் மோடிக்கு, நமீபியா அதிபர் நெட்டம்போ நந்தி எண்டைட்வா உற்சாக வரவேற்பு அளித்தார்.
இருநாட்டுத் தலைவர்களும் கைகளைக் குலுக்கி நட்பைப் பரிமாறிக் கொண்டதையடுத்து, பாரம்பரிய முறைப்படி 21 குண்டுகள் முழங்கப் பிரதமர் மோடிக்கு அந்நாட்டினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து, பிரதமர் மோடி, நமீபியா அதிபர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனையில் இருநாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தலைநகர் விண்ட்ஹோக்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அந்நாட்டின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.