மேற்குவங்க மாநிலம் சிலிகுரி அருகே கிரிக்கெட் போட்டி நடத்துவது தொடர்பாக இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
சிலிகுரி நகருக்கு அருகே உள்ள பாக்ரகோட் பகுதியில் கிரிக்கெட் போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது போட்டி நடத்துவதில் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் மாறி, மாறி கல்வீசி தாக்கி கொண்டதில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் கடைகள் சேதமடைந்தன.
மோதலை தடுக்க முயன்ற போலீசார் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் அங்குப் பதற்றம் நிலவியது.