அஜித்குமார் மரணம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கும்படி தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியினருக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய நாம் தமிழர் கட்சியின் மனு உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது கண்டதேவி தேரோட்டத்தின் காரணமாகப் போராட்டத்துக்கு அனுமதி மறுத்ததற்கு, போலீஸ் வேண்டுமானால் கோயிலுக்கு பாதுகாப்புக்குப் போகட்டும் எனச் சீமான் யூடியூப் சேனல் ஒன்றில் பேசியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கேட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு, போராட்டத்தில் ஒரு அரசியல் கட்சித் தலைவர் பங்கேற்காததற்காக, அதையே காரணமாகக் கூறி மீண்டும் ஒரு போராட்டம் நடத்துவீர்களா? எனக் கேள்வி எழுப்பியது.
போராட்டத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை என்றால் தடையை மீறி போராட்டம் நடத்துவோம் எனப் பொதுவெளியில் பேசுவதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது எனவும் தெரிவித்தது.
தேரோட்டத்தன்று போராட்டத்துக்கு அனுமதி கொடுக்கவில்லை என்பதற்காகத் தடையை மீறிப் போராடுவேன் எனக் கூறுவது அரசியல் கட்சிக்கு அழகல்ல என்றும்,
சட்டத்தை மீறிப் போராடுவேன் எனக் கூறுவது குறித்து இதுவரை காவல்துறை வழக்குப் பதியாதது ஏன்? எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.