சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் கனரக வாகனம் மோதி பெண் உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது.
சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீதேவி என்பவர், புரசைவாக்கத்தில் உள்ள பள்ளியில் தனது பிள்ளைகளை இறக்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே வந்தபோது இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்து வாகனத்தில் சிக்கிய அவர், பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசாரின் தாமதத்தாலேயே தனது மகள் உயிரிழந்ததாக ஸ்ரீதேவியின் பெற்றோர் குற்றஞ்சாட்டி உள்ளனர். அம்மா எங்கே என்று கேட்டால் பிள்ளைகளிடம் என்ன சொல்வது எனத் தெரியாமல் தவித்து வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.