குமுளியில் அலுவலக பணியில் இருந்த அரசு ஊழியரை போராட்ட குழுவினர் தனியே அழைத்துச்சென்று சரமாரியாக தாக்கும் காட்சி வைரலாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளியில் கேரள நீர்வளத்துறையின் முல்லைப் பெரியாறு புதிய அணைக்கான துணைக்கோட்ட அலுவலகம் உள்ளது. இங்கே விஷ்ணு ராதாகிருஷ்ணன் என்ற அரசு ஊழியர், பணி புரிந்து கொண்டிருந்தார்.
வேலை நிறுத்தத்தின் போது அரசு அலுவலகம் திறந்து வைத்ததற்காக, அவரை போராட்ட கும்பல் சந்துக்குள் அழைத்து வந்து சரமாரியாக தாக்கியது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.