சுதந்திர போராட்ட காலத்திலேயே இந்தியாவும், நமீபியாவும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து வந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரசுமுறைப் பயணமாக நமீபியா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது. ‘வெல்விட்சியா மிராபிலிஸ்’ எனும் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் அதிபர் நெட்டம்போ நந்தி எண்டைட்வா வழங்கி கௌரவித்தார்.
இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 140 கோடி இந்தியர்களின் சார்பில் விருதை பெற்றுக் கொண்டதாக தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய வைர உற்பத்தியாளர்களில் நமீபியாவும் ஒன்று எனக்கூறிய பிரதமர் மோடி, சுதந்திர போராட்ட காலத்திலேயே இந்தியாவும், நமீபியாவும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து வந்துள்ளதாக கூறினார்.