கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து நடைபெற்ற இடத்தில், ரயில்வே பாதுகாப்பு துறையின் உண்மை கண்டறியும் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
செம்மங்குப்பம் பகுதியில் உள்ள லெவல் கிராசிங்கில் பள்ளி வேன் மீது பயணிகள் ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை, ரயில்வே போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
பங்கஜ் சர்மா மீது ஐந்து பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், செம்மங்குப்பம் பகுதிக்கு புதிய ரயில்வே கேட் கீப்பராக ஆனந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த விசாரணைக் குழு விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் விபத்து நடைபெற்ற இடத்தில் ரயில்வே அதிகாரி கணேஷ் தலைமையிலான 6 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவினர், விசாரணை மேற்கொண்டனர். ரயில்வே ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் உண்மை கண்டறியும் குழுவினர் விசாரணை நடத்தினர்.