திருவண்ணாமலையில் உள்ள அருளாளர் அருணகிரிநாதர் கோயிலில் 650 மாணவிகள் ஒரே நேரத்தில் பரத நாட்டியம் ஆடி உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் அவதார நல்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அருளாளர் அருணகிரிநாதருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு 2 ஆண்டுகளான நிலையில், மஞ்சள், சந்தனம், தயிர், பன்னீர் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதையடுத்து, மணிமண்டபம் எதிரே குவிந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 650 கலைக்கூட மாணவிகள், ஒரே நேரத்தில் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.