சீனாவின் ஷாங்காய் அருகே பாலைவனத்தில் நடைபெற்ற ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில், ஏராளமான மாடல்கள் கலந்து கொண்டனர்.
நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட சீனா மற்றும் ஐரோப்பிய ஆடைகளை அணிந்து வந்த மாடல்களை நூற்றுக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.
இதனைத் தொடர்ந்து, நடந்த வாணவேடிக்கை நிகழ்ச்சியையும் அவர்கள் கண்டு மகிழ்ந்தனர். இது பிராந்தியத்தின் கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் என்று, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.