பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடைபெற காரணமான அனைவர் மீதும் காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
சாத்துாரில் நேற்று நடந்த மதிமுக கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது பத்திரிகையாளர்களை மதிமுக தொண்டர்கள் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் பத்திரிகையாளர்கள் பலர் காயமடைந்துள்ளனர். பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் பொது இடங்களில் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடைபெற காரணமான அனைவர் மீதும் காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எல். முருகன் வலியுறுத்தியுள்ளார்.