கோவை குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான டெய்லர் ராஜா, 28 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.
கோவையில் கடந்த 1996ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்கு வந்திருந்த பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, ஆர்எஸ் புரம் டி.பி. ரோடு சந்திப்பில் பேச இருந்த மேடைக்கு அருகே குண்டு வெடித்தது. தொடர்ந்து, கோவையில் 14 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 58 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த வழக்கில் தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்க நிறுவனர் பாஷா உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான டெய்லர் ராஜா, 28 ஆண்டுகளுக்குப் பிறகு சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டார். டெய்லர் ராஜாவை போலீசார் கோவைக்கு அழைத்துவர திட்டமிட்டுள்ளதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.