மதுரை விமான நிலையத்தின் ஓடுதள விரிவாக்கப்பணியை அண்டர் பாஸ் முறையில் அமைத்திட வேண்டும் எனச் சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகனிடம் மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
மதுரையில் ஆய்வு மேற்கொண்ட அவரிடம், விமான நிலைய ஓடுதள விரிவாக்கப்பணியை அண்டர் பாஸ் அமைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டு பூர்வாங்கப் பணிகளும் நிறைவுற்ற நிலையில், அதனைக் கைவிட்டு, தற்போது 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாற்றுச் சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.