பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகை ஹுமைரா அஸ்கர் அலி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கராச்சியில், அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த அவர், வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
சமீபகாலமாக வாடகை செலுத்தாமல் இருந்து வந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் அங்குச் சென்று பார்த்தபோது, அவர் இறந்த நிலையில் கிடந்ததாகக் கூறப்படுகிறது.
2 வாரங்களுக்கு முன்பே அவர் இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.