இண்டர்நெட் இல்லாமல் தகவல்களைப் பகிரும் வகையில் bitchat என்ற செயலியை எக்ஸ் வலைத்தளத்தின் இணை நிறுவனர் ஜாக் டோர்சி அறிமுகம் செய்துள்ளார்.
இணையவசதி இல்லாமல் ப்ளூடூத் நெட்வொர்க்கை அடிப்படையாகக் கொண்டு பிட்சாட் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயலி மூலம் இணையவசதி, சிம் கார்டு இல்லாமல் தகவலைப் பரிமாறிக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியுரிமைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, இந்த செயலியைப் பயன்படுத்தப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.