மதுரையில் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு சென்ற வழியில் குப்பைகளைத் திரையிட்டு மறைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு ஆய்வுக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அதில் சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன், மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் என 120க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மதுரையில் நடைபெற்ற திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குச் செல்லும் வழியில் ஜன்னல் வழியாகக் குப்பை தெரியும் என்பதற்காகத் திரையிட்டு மறைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.