ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கோர்டன் ரோர்க் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானர்.
1959-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான கோர்டன் ரோர்க், மிகவும் வேகமான பந்து வீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.
இவர் ஹெபடைடிஸ் என்னும் கல்லீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்டு கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கிவிட்டார்.
மிகக் குறுகிய கால சர்வதேச டெஸ்ட் வாழ்க்கையில் 4 போட்டிகளில் விளையாடியிருந்த இவர் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.