74 நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் தங்கள் நாட்டுக்குச் சுற்றுலா வரலாம் என்று சீனா அறிவித்துள்ளது.
சீனா தனது விசா கொள்கையை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தளர்த்தியுள்ளது.
தற்போது 74 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள், 30 நாட்கள் வரை விசா இன்றி சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியும்.
சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், விசா கொள்கையைச் சீன அரசு படிப்படியாக விரிவுபடுத்தி வருகிறது.