கென்யா தலைநகர் நைரோபியில் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 1990-ம் ஆண்டு கென்யாவில் சுதந்திரமாகத் தேர்தல் நடத்தக்கோரி போராட்டம் நடைபெற்றது.
அதன் 35-ம் ஆண்டு நினைவையொட்டி நைரோபியில் தற்போதைய அரசை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கூட்டத்தைக் கலைக்கத் தண்ணீர் புகைக் குண்டுகளை வீசிய போலீசார், பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 11 பேர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.