கொடைக்கானல் புட்டபர்த்தி சாய்பாபா ஆசிரமத்தில் குருபூர்ணிமா விழாவை முன்னிட்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்குக் கம்பளி போர்வை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரிச்சாலை அருகே அமைந்துள்ள புட்டபர்த்தி சாய்பாபா ஆசிரமத்தில் குரு பூர்ணிமா விழா விமரிசையாக நடைபெற்றது.
ஆசிரமத்தில் உள்ள மறைந்த சத்ய சாய்பாபாவிற்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஓம்காரம் மற்றும் பஜனைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்குக் கம்பளி போர்வை, இனிப்பு, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.
காலை முதலே சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து பிரசாதங்களை வாங்கிச் சென்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியில், சத்ய சாய் சேவா சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.