பணம் கையாடல் செய்ததாக எழுந்த புகாரையடுத்து திருமலா பால் நிறுவன மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நவீன் பஞ்சலால் என்பவர், சென்னையில் உள்ள திருமலா பால் நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த 3 ஆண்டுகளாக இந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், 45 கோடி ரூபாய் கையாடல் செய்ததாகப் புகார் எழுந்தது.
இதுகுறித்து கொளத்தூர் காவல் துணை ஆணையர் பாண்டியராஜனிடம், நிறுவனத்தின் சட்ட ஆலோசகர்கள் புகாரளித்துள்ளனர்.
இதையடுத்து நவீனை தொடர்புகொண்ட போலீசார் விசாரணைக்கு வருமாறு அழைத்த நிலையில், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.