இந்தியாவில் செயற்கைக்கோள் வழியாக இணையச் சேவை வழங்க, எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது.
நாட்டின் செயற்கைக்கோள் இணையச் சேவை சந்தை விரைவாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தனியார்த் துறையும் செயற்கைக்கோள் சேவைகளை வழங்க அனுமதிக்கும் விதமாக, கடந்த 2023ல் மத்திய அரசு இந்திய விண்வெளி கொள்கையை வெளியிட்டது.
இதையடுத்து, பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களும் செயற்கைக்கோள் இணையச் சேவை வழங்க ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில், ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு இந்தியத் தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் அனுமதியளித்துள்ளது.