அரக்கோணம் அருகே பணியின்போது தூங்கிய புகாரில் ரயில்வே கேட் கீப்பர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் கடந்த 8-ஆம் தேதி காலை, ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் சேந்தமங்கலம் மற்றும் தண்டலம் பகுதிகளில் பணியின்போது தூங்கிய புகாரில் ரயில்வே கேட் கீப்பர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.