ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
ஜம்மு-காஷ்மீரிலிருந்து பஞ்சாப் நோக்கி சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. லாகன்பூர் அருகே பயணித்தபோது சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ரயில்வே ஊழியர்கள், மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.