சென்னை கல்லுக்குட்டையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வீட்டை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி இயந்திரத்தின் முன்பு படுத்து பெண் ஒருவர் தர்ணாவில் ஈடுபட்டார்.
பெருங்குடி அருகே உள்ள கல்லுக்குட்டையை சேர்ந்த தம்பதி, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து ஏரியை ஒட்டிய 300 சது அடி புறம்போக்கு நிலத்தை 3 லட்சம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கியுள்ளனர்.
பின்னர் அந்த தம்பதி, சம்பந்தப்பட்ட புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டியுள்ளனர். இந்நிலையில் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது குறித்துத் தகவலறிந்து வந்த அதிகாரிகள், வீட்டை இடிக்க முற்பட்டனர்.
அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலத்தை வாங்கிய பெண், ஜேசிபி வாகனத்தின் முன்பு படுத்துக்கொண்டு தர்ணாவில் ஈடுபட்டார். இதனையடுத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர், ஆக்கிரமிப்பு வீடு இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.