தைலாபுரம் வீட்டில் தனது தாயார் சரஸ்வதி அம்மையாரை அன்புமணி ராமதாஸ் சந்தித்தார்.
பாமகவில் ஏற்பட்டுள்ள உட் கட்சி விவகாரம் எப்போது முடிவுக்கு வரும் என்று அக்கட்சியினர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் தனித்தனியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டங்களை நடத்துவதோடு தீர்மானங்களையும் நிறைவேற்றுகின்றனர்.
இந்நிலையில்
அன்புமணி நீண்ட நாட்களுக்கு பிறகு தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று தாயார் சரஸ்வதி அம்மையாரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பானது அக்கட்சியினர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.