பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் வீட்டிற்கு சென்று தனது தாயை சந்தித்த நிலையில் மயிலாடுதுறையில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சி கூட்டத்தில் அன்புமணியை விமர்சனம் செய்யாமல் ராமதாஸ் தனது பேச்சை முடித்துக் கொண்டார்.
மயிலாடுதுறையில் நாகப்பட்டினம், காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கான பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மிகவும் பரபரப்புக்கு இடையே நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ராமதாஸ் பேச்சு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் 3 நிமிடங்கள் மட்டுமே பேசிய ராமதாஸ் அன்புமணி குறித்து ஏதும் விமர்சிக்காமல் தனது பேச்சை முடித்துக் கொண்டார். மேலும் செய்தியாளர்களையும் சந்திக்காமல் புறப்பட்டார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் வீட்டிற்கு சென்று தனது தாயை சந்தித்த நிலையில் அன்புமணியை விமர்சனம் செய்யாமல் ராமதாஸ் தனது பேச்சை முடித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.